sand quarries closed in TN
தமிழகத்தில் செயல்பட்டு வந்த 9 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டுள்ளதால் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் அதிகமாக மணல் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனால் ஒரு லோடு மணல் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம், திருச்சி, அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் 10 லட்சம் வேலையாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிக மணல் குவாரிகள் திறக்கவேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே உட்கட்சி பூசல் காரணாமாக மணல் குவாரிகள் மூடப்பட்டிருந்தாலும் மணல் அள்ளுவது தடுக்கபட்டிருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம், மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கபடுவதாக கூறி ஏரளாமான பகுதிகளில் பொதுமக்கள் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த மணல் குவாரிகள் மூடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
