Asianet News TamilAsianet News Tamil

Stalin Vs Governor: சனாதனமும் மதமும் வேறு வேறு.. சனாதன தர்மம் என்றால் இது தான்.. பதிலடி கொடுத்த ஆர். என். ரவி

சனாதனமும் மதமும் வேறு, வேறு என்றும் சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் தான் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Sanatana and Religion are different - Governor R.N.Ravi Speech
Author
Tamilnádu, First Published Jun 26, 2022, 4:20 PM IST

சனாதனமும் மதமும் வேறு, வேறு என்றும் சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் தான் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் மாணவர்களிடைடே பேசிய அவர்,” தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிகப்பெரிய சக்தியை வழங்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க:”அக்னிபத்” எதிராக பாஜக வை எதிர்க்கும் திமுக செய்வது மட்டும் நியாயமா..? போட்டு பொளந்த சீமான்..

இந்தியாவை ஆங்கிலேயர்கள் நீண்டகாலமாக ஆட்சி செய்ததால், நாம் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் கலாசார ரீதியாகவும் மிக பெரிய இழப்பை சந்தித்து இருக்கிறோம். தற்போது வரையில், நாட்டு மக்களின் வாழ்க்கை முறை தர்ம விதிகளில் இருந்து திசை திரும்பியே இருக்கிறது என்று கூறிய அவர், அதிலிருந்து மீள வேண்டியது நம்முடையை நீண்டகால தேவை என்று மகாத்மா காந்தி ஒரு முறை குறிபிட்டதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க:தொண்டர்கள் என்னுடன் தான் உள்ளனர்..! இபிஎஸ் அணிக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அந்த காலத்தில் சனாதனத்தை பின்பற்றியதாகவும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நாடு தற்போது விழித்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சனாதன தர்மம் பற்றி பேசும் போது அதனை மதத்தோடு ஒப்பிட்டு பேசுகின்றனர். ஆனால் சனாதனம் வேறு. மதம் வேறு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட மதச் சார்பின்மைக்கும், வெளியே தற்போது போதிக்கபடும் மதச் சார்பின்மைக்க்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று அவர் கூறினார். 

மேலும் படிக்க:80 சதவிகித தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கமே அதிமுக ..! கண்ணீர் விட்டு அழுத செல்லூர் ராஜு

இந்தியாவின் முதுகெலும்பு ஆன்மிகம் தான் என்று கூறிய விவேகானந்தர் மற்றும் காந்தியடிகள் கூறிய ஆன்மிக வழியில் நாடு தற்போது சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் அனைத்து கடவுள்களும் மதிக்கப்படும் என்றும் ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று சனாதனம் கூறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios