Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தையை உலுக்கிய ரயில் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்... 2 ஆண்டுகளுக்கு பின் துப்பு கொடுத்த நாசா!

தமிழகத்தையை உலுக்கிய சேலம் ரயில் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக துப்பு துலங்கியுள்ளது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சொந்தமான பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

Salem train robbery case
Author
Chennai, First Published Aug 27, 2018, 11:28 AM IST

தமிழகத்தையை உலுக்கிய சேலம் ரயில் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக துப்பு துலங்கியுள்ளது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சொந்தமான பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்த பிறகு தான் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. Salem train robbery case

முதலில் இந்த வழக்கை ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின்னர் அது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பணப் பெட்டிகளுக்கு பாதுகாப்பாக சென்ற காவலர்கள், வேன் ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளை சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் நடைபெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. Salem train robbery case

இந்நிலையில் சேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளை குறித்து 2 ஆண்டுக்கு பின் நாசா உதவியுடன் செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Salem train robbery case

இந்த கொள்ளையில் 4 மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் ரயில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் மத்திய பிரதேச போலீசார் உதவியை நாட உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios