சேலத்துக்கு இன்னொரு கலெக்டரம்மா...!?

சொந்த மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பெண் குழந்தைக்கு ‘ரோகிணி’ என்று பெயரைச் சூட்டினார்: செய்தி.(அப்போ சேலம் மாவட்டத்துக்கு இன்னொரு கலெக்டரம்மா கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க.)

salem collector rohini

* ரஃபேல் விமானத்தின் கொள்முதல் விலையை வெளியிட்டால் தேசப்பாதுகாப்பு கேள்விக்குறியாகும்: என்று மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். (மேடம், மேடம் ஒரு சின்ன டவுட்டு. அது தேச பாதுகாப்பா இல்ல தேசத்தை ஆளுற பி.ஜே.பி.யோட பாதுகாப்புக்கு சிக்கலா?)

* மும்பை விமான நிலையத்தில் வைகோவை சோதனை செய்த அதிகாரி அவருக்கு இந்தி தெரியவில்லை என்பதால் ‘நீ இந்தியன் இல்லை’ என்று கிண்டல் செய்தாராம்: செய்தி. (தல கிட்ட வம்பிழுக்கிறதே இந்த கட்டதுரைங்களுக்கு வெளாட்டாபோச்சு! இப்போ கம்முன்னு போவோம், நெக்ஸ்ட்டு எலெக்‌ஷன்ல மீட் பண்ணுவோம்டா!)

* லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னையை தீர்க்க அரசுப்பணத்தை செலவழிப்பது தப்பே கிடையாது!: என்று அரசு உயரதிகாரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியிருக்கிறார். (நெசமவாண்ணே சொல்லுறீக? விவசாயிங்க கூட  கடவுள் கண்டெடுத்த தொழிலாளிதான். இதை உங்க  புரட்சித் தலைவரே பாடியிருக்காரு. 

* சொந்த மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பெண் குழந்தைக்கு ‘ரோகிணி’ என்று பெயரைச் சூட்டினார்: செய்தி.(அப்போ சேலம் மாவட்டத்துக்கு இன்னொரு கலெக்டரம்மா கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க.)

* ரஜினி சாரோட பண்பிலும், பணிவிலும் வெறும் பத்து சதவீதம் இருந்தாலே போதும். சிறந்த மனிதனாக உலவலாம்: என்று சொல்லி த்ரிஷா சிலிர்த்திருக்கிறார். (அந்த குணமெல்லாம் நூறு சதவீதம் இருந்தும் கூட ஏனுங்க ரஜினியால அப்படி ’சிறந்... மனிதன்’ அப்படிங்கிற பெயரை எடுக்க முடியலைன்னு பல பேர் கேட்கிறாங்களே மேடம்?)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios