தமிழ்  திரைப்படம் ஒன்றில்  நடிகர் வடிவேலு பஸ் கண்டக்டராக நடித்த ஒரு நகைச்சுவை காட்சி வரும். அதில், ஒரே மாதிரியாக இருக்கும் 2 அரசு பஸ்களில் ஒன்றில் ஏறி பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும்போது, மற்றொரு நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடம் தகராறு ஏற்பட்டு வடிவேலுவை அவர் விரட்டுவது போன்ற காட்சி இருக்கும். சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சேலம் அருகே இது போன்று ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்  இருந்து சேலத்துக்கு நாள்தோறும் காலையில் 15  நிமிட இடைவெளியில்  2 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு அரசு பஸ்களும், சேலம் வரும் வழியில் ஆத்தூருக்கு காலை 9.15 மற்றும் 9.25 மணிக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

இதனிடையே நேற்று முன்தினம் காலையில் சிதம்பரத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆத்தூருக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர், அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென சேலம் செல்லும் பஸ் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. இதைப் பார்த்த அந்த கண்டக்டர்இ தனக்கு தெரியாமல் டிரைவர் பேருந்ததை எடுத்துச் செல்கிறாரே என நினைத்து ஓடிப் போய் ஏற முயன்றார். அதற்குள் பேருந்து வேகமாக சென்றுவிடவே, பின்னால் வந்த தனியார் பேருந்தில் ஏறி  சேலம் சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து ஏறினார்.

அப்போது தான் தெரிந்தது அது தான் பணியும் பேருந்த அல்ல என்று. இதையடுத்து செய்வதறியாது திகைத்த கண்டக்டர் மீண்டும் வேறு பஸ் ஏறி ஆத்தூர் வத்து சேர்ந்தார்.

சிதம்பரத்தில் இருந்து 2-வதாக புறப்பட்ட பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் அந்த பஸ் ஆத்தூரில் அதிக நேரம் நிற்காமல் 9.15 மணிக்கு பஸ் புறப்படுவதற்கு முன்பாக புறப்பட்டதால் அவருக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது தெரியவந்தது. வடிவேலு படப் பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் ஆத்தூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.