தீபாவளியையொட்டி, அரசு ஊழியர்களுக்கான ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என்ற அரசாணை செயல்படுத்தப்படாது என கருவூலத்துறை தெரிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தீபாவளி பண்டிகை இம்மாதம் 29ம் தேதி வருவதால், இந்த மாத சம்பளத்தை 28ம் தேதியே வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். 

ஆனால் தற்போது வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே ஊதியம் என அறிவிக்கப்பட்ட அரசாணை செயல்படுத்தப்படாது என கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 

புதிய அறிவிப்புபடி வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.