உலகின் பாதுகாப்பான நகரங்கள்: சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், சென்னையும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Safest city worldwide do you know the place for tamilnadu capital Chennai smp

டெல்லி, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொலை, கொள்ளை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை போன்ற குற்றங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தினமும் நடந்து வருகின்றன.

கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடக்கும் குற்றங்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும், பெரு நகரங்களில் குற்றங்களை கட்டுப்படுத்துவது சற்று சவாலான விஷயம்தான். இருப்பினும், இந்தியாவின் மற்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் தலைநகரான சென்னை எப்போதும் பாதுகாப்பான நகரமாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. பாதுகாப்பு சூழல், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சென்னை முதலிடம் பிடித்தது. தவிர, கோயம்புத்தூர் மற்றும் மதுரையும் முதல் 10 இடங்களில் இருந்தது.

இந்த நிலையில், உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பலர் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட சென்னையில் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் அனைவரும் கூறுகின்றனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை அதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், உலகளாவிய பாதுகாப்பு குறியீட்டு கணக்கீடும் அதை உறுதி செய்துள்ளது. செர்பியாவைச் சேர்ந்த NUMBEO என்ற ஆராய்ச்சி நிறுவனம், 2023ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 334 நகரங்களை உள்ளடக்கிய அந்த பட்டியலில் கடுமையான சட்டங்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி மற்றும் அஜ்மான் ஆகியவை முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. கத்தார் தலைநகர் தோஹா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 10 இடங்களுக்குள் எந்த இந்திய நகரங்களும் இடம்பெறவில்லை. இருப்பினும், 40ஆவது இடத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மங்களூரும், 76ஆவது இடத்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வதோதராவும், 82ஆவது இடத்தை அதே மாநிலத்தைச் சேர்ந்த அகமதாபாத்தும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில், குஜராத்தின் சூரத் 94ஆவது இடத்தையும், நவி மும்பை 105ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆனால், இவை எதுவுமே பெருநகரங்கள் அல்லது மெட்ரோ நகரங்கள் கிடையாது.

அந்த தகவலுக்கும் நமது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.!

அதேசமயம், பாதுகாப்பு அளவீட்டில் 60 சதவீதமும், குற்ற அளவீட்டில் 40 சதவீதமும் பெற்று பெருநகரமான சென்னை 127ஆவது இடத்தில் உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவிலேயே பாதுகாப்பான பெருநகரம் அதாவது மெட்ரோ நகரம் என்று பார்த்தால் அது சென்னைதான். இதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி போன்றவை உள்ளன.

அதே சமயம், இந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரங்களின் பட்டியலில், நாட்டின் தலைநகரான டெல்லி முதலிடத்திலும், நொய்டா மற்றும் குர்கான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலகில் அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் வெனிசுலாவின் கராகஸ் முதலிடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களை பிரேசிலின் 4 நகரங்களும், தென்னாப்பிரிக்காவின் 3 பிராந்தியங்களும் ஆக்கிரமித்துள்ளன. முதல் 100 இடங்களில் டெல்லி 72ஆவது இடத்தையும், நொய்டா 93ஆவது இடத்தையும் பிடித்து அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios