கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜன் முன்னிலையில் அக்கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஒன்றிய கழகச் செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து தங்களிடம் உரிய கருத்துக்கள் கேட்கப்படவில்லை எனவு, அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
மதுரை ரயில் விபத்து: நாளை தொடங்கும் விசாரணை - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவு!
இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் விளக்கம் அளித்து கூட்டத்தை அமைதிப்படுத்தினார்.
திமுக கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்தால் எழுந்த அதிருப்தி காரணமாக அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதும், சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
