Asianet News TamilAsianet News Tamil

நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்.. வெளியான தகவல்.!

ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் நாளை நடைபெற இருந்த ஆர்.ஆர்.எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

RSS  rally sudden postponement.. Released information
Author
First Published Nov 5, 2022, 11:23 AM IST

ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் நாளை நடைபெற இருந்த ஆர்.ஆர்.எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல் துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6-ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க;- தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!

RSS  rally sudden postponement.. Released information

இந்த வழக்கு அக்டோபர் 31-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனையில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- மக்களே உஷார்! சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழக்க இதுதான் காரணம்.. கலெக்டர் கூறிய அதிர்ச்சி தகவல்.!

RSS  rally sudden postponement.. Released information

இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதனால் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  திருமணமான 3வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை.. ரோட்டில் விழுந்து கதறிய மனைவி..!

Follow Us:
Download App:
  • android
  • ios