திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்த முடியும். ஆனால் அது நீதிமன்றத்தில் உள்ளதால் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புகிறேன். என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், “திருப்பரங்குன்றம் விவகாரத்தை தேசிய அளவில் எடுத்துச்செல்ல தேவையில்லை அதனை தமிழகத்திலேயே தீர்க்க முடியும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை தீவிரப்படுத்த முடியும். ஆனால் இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது அங்கேயே தீர்க்கப்படும் என நம்புகிறேன். தமிழகத்தில் இந்துகள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அதுவே இந்த விவகாரத்தில் தீர்வை எட்ட போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் கடநத 10 முதல் 15 ஆண்டுகளாக மட்டுமே ஆர்எஸ்எஸ் பேசுபொருளாக இருக்கிறது. சிலரது தவறான புரிதல் காரணமாக இந்த சங்கம் குறித்து வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த அமைப்பு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாருக்கம் எதிரானது கிடையாது. இந்துகள் பாதுகாப்புக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொடங்கப்பட்டது“ என தெரிவித்துள்ளார்.