Rs 5 thousand crore cash fraud 2 persons arrested
கன்னியாகுமரியில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி தனியார் நிறுவன அதிபர்கள் இரண்டு பேரை பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தமம்பாலை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது.
இந்த நிதி நிறுவனத்தில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் பணங்களை, நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து, தாங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வரவில்லை என்று கூறி சிலர், புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, நிதிநிறுவன அதிபர்கள் குழித்துறை அனில்குமார் மற்றும் மூவோட்டுக்கோணம் அனில்குமார் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
