சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் நேற்று இரவு ஒரு கும்பல், உருட்டுக்கட்டை, கிரிக்கெட், ஆக்கி ஆகிய பேட்களை எடுத்து கொண்டு, ரகளை செய்தபடி வந்தது. சாலையில் செல்பவர்களை மிரட்டி, விரட்டியடித்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் என்பவர், அவர்களை தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல், அவரை சரமாரியாக தாக்கியது. மேலும்,அங்கு நிறுத்தி இருந்த அவரது காரையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது.

தொடர்ந்து சாஸ்திரி நகர் 11, 12, 15,18 ஆகிய தெருக்களில் சென் மர்ம கும்பல், அங்கிருந்த கார்கள், ஆட்டோக்களை உடைத்து சேதப்படுத்தின. மொத்தம் 7 கார்கள், 4 ஆட்டோக்கள் சூறையாடப்பட்டன.

புகாரின்படி எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்