டி. நகரில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 100 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

டி. நகர் ஃபசுல்லாஹ் சாலையில் வசிப்பவர் கைலாஷ் தொழிலதிபரான இவர் நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இரவு சீக்கிரமே குடும்பத்தினர் அனைவரும் உறங்க சென்று விட்டனர்.

நள்ளிரவில் இவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவின் மேல் இருந்த சாவியை எடுத்து திறந்து பீரோவிலிருந்த 100 சவரன் தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்களை நிதானமாக திருடி கொண்டு வந்த வழியே தப்பி சென்றுள்ளனர்.

காலையில் வழக்கம் போல் கண் விழித்த கைலாஷ் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக பீரோவை சோதித்துள்ளார்.

அப்போது பீரோவில் வைக்கபட்டிருந்த  100 பவுன் நகைகள் வெள்ளி பொருட்கள்மாயமானது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கைலாஷ் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கைலாஷ் வீட்டிற்கு வந்த பாண்டி பஜார் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கை ரேகைகள் எடுக்கப்பட்டது.

டி..நகரின் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.