மின்னல் வேகத்தில் வந்த பைக்! சாலையை கடக்க முயன்ற நீதிபதி தூக்கி வீசப்பட்டு பலி! விபத்தை ஏற்படுத்தியவர் எஸ்கேப்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். 

Road accident... Nilgiris district additional judge killed tvk

சாலையை கடக்க முயன்ற மாவட்ட நீதிபதி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக உடுமலை ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நீதிபதி கருணாநிதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட்! கோவைக்கு ஆரஞ்ச்! மற்ற மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!

விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த நீதிபதி கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் அட்டெம்ட்டில் மிஸ்ஸான கணவர்! 2வது முறையாக ஸ்கெட்ச் போட்டு கதையை முடித்த மனைவி! கள்ளக்காதலால் பயங்கரம்

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி யார் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாவட்ட நீதிபதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios