சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்த பெண் உதவி ஆய்வாளர் மணிக்குயில் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சென்னை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பணிபுரியும் மணிக்குயில் பெண் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே வளசரவாக்கத்தில் உள்ள R9 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணி புரிந்தவர். இந்நிலையில் இன்று பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் படப்பை அருகே சொரப்பண சேரி பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணிக்குயில் சம்பவ இடத்திலேயே ரத்த வௌ்ளத்தில் உயிரிழந்தார். 

இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.