வாணியம்பாடி,

ஆப்பிள் ஏற்றிச்சென்ற லாரி சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு லாரி ஒன்று 10 டன் ஆப்பிள் பழங்களை ஏற்றிக் கொண்டு வியாழக்கிழமை நள்ளிரவு புறப்பட்டது. அதில் இருந்த ஆப்பிள் பழங்கள் பெட்டிகளில் நிரப்பப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன. லாரியை ஓட்டுநர் முருகேசன் (45) ஓட்டிச் சென்றார்.

அந்த லாரி வேலூர், ஆம்பூரை கடந்து சென்று கொண்டிருந்தது. வியாழக்கிழமை காலை வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி லாரி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த லாரி சாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் முருகேசன், லாரியில் இருந்த முனியப்பன் (45), சுரேஷ் (35) ஆகியோர் பெருத்த காயம் அடைந்தனர்.

இதனிடையே லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த பெட்டிகள் நசுங்கி உடைந்து ஆப்பிள் பழங்கள் சாலையில் சிதறியது.

இந்த நிலையில் விபத்து குறித்து அறிந்த வாணியம்பாடி நகர காவளார்கள் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்பட 3 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடந்தது.

இந்த விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.