ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில், அந்த வீட்டிற்கு வருவாய் துறையினர் வருகை புரிந்துள்ளனர். 

ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக அவரது மறைவிற்கு பிறகு இரு அணிகளாக பிரிந்தது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவே அவரது அணியில் இருந்த எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது. 

இதையடுத்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி க்கும் எடப்பாடிக்கும் சலசலப்பு ஏற்பட்டது. 

இதனால் எடப்பாடி ஒபிஎஸ் பக்கம் சாய ஆரம்பித்தார். ஆனால் ஒபிஎஸ் தரப்பு இரு கோரிக்கைகளை முன்வைத்தது. அதன்படி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், ஜெவின் வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும், தெரிவித்தார். 

இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு வருவாய் துறையினர் வருகை புரிந்துள்ளனர்.