பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களின் வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. 
 

Retirement age of part time School teachers extended to 60 - School Education

நடப்பு செப்டம்பர் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,”2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில், தற்போது 12 ஆயிரம் பேர் ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். 

மேலும் படிக்க:திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு..

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கையாளுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios