Resistance to the Dam Safety Bill A unanimous decision of the Tamil Nadu Legislative Assembly has been fulfilled

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 
அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி தீர்மானம் கொண்டுவந்தார். 

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா, தமிழகத்துக்கு பாதகம் என தெரிவித்துள்ளார். அணைகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலங்களின் ஒருமித்த கருத்துடனேயே மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அரசின் மசோதாவால் அணைகளை பராமரிப்பதில் பாதிப்பு ஏற்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணை பராமரிப்பு சிக்கலாகும் என சட்டப்பேரவையில் முதல்வர் பேசியுள்ளார். மசோதா தொடர்பாக தமிழ்நாடு அரசின் கருத்து கேட்கப்படவில்லை. அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றும் முடிவை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வர உள்ள அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.