அமர்நாத்தில் பனிச்சரிவால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் 4 நாட்கள் சிக்கி தவித்த 25 தமிழர்கள்..! மீட்ட தமிழக அரசு
அமர்நாத் யாத்திரை சென்ற தமிழர்கள் 25 பேர் பனிமலையில் கடும் குளிர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவித்து வருவதாகவும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அமர்நாத்திற்கு ஆன்மிக சுற்றுலா
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சங்கர் (77) என்பவர், ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் வட இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள ஆன்மீக தளங்களை காண சுற்றுலா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி சங்கர் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர் கொண்ட யாத்திரை குழுவினர்கள் சென்னையில் இருந்து ரயில் மூலமாக காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கடும் மழை குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையில் நடந்து சென்று அமர்நாத் பணிலிங்கம் கோயிலில் தரிசித்துள்ளனர். அடுத்த நாள் அங்கிருந்து ஶ்ரீநகருக்கு புறப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் வழி மறித்த சி.ஆர் பி.எப் போலீசார்,
நிலச்சரிவால் தமிழர்கள் பாதிப்பு
ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையில் நிலச்சரிவு ஏற்பட்டு அப்படியே மூடி விட்டது. பாதை முற்றிலும் இல்லை, நீங்கள் யாரும் செல்ல முடியாது என கூறி மணிகாம்ப் என்ற முகாம் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து ஶ்ரீநகருக்கு செல்ல வேறு வழி இல்லாத காரணத்தால் கடந்த 4 நாட்களாக ஒரே இடத்தில் சிக்கி தவித்தனர். இதனை தொடர்ந்து உணவு தண்ணீர் இல்லாமல் கடும் குளிரில் தவித்து வருவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உதவி கேட்டனர்.
இதனையடுத்து தமிழக அரசின் நடவடிக்கையை அடுத்த தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டார். தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் சாலை மார்க்கமாக ஜம்மு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து, ரயில் மூலம் இன்று அதிகாலை டெல்லி வந்தனர். இதனையடுத்து இன்று இரவு அல்லது நாளை காலை சென்னைக்கு அழைத்து வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர்களை மீட்ட தமிழக அரசு
இது தொடர்பாக தகவல் தெரிவித்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்றிருந்த 25 தமிழர்கள் பனி மலையில் சிக்கி உணவு, குடிநீர் இல்லாமல் தவித்தது தொடர்பாக தகவல் வந்ததாகவும், இதனையடுத்து நிலையில், மறுவாழ்வுத் துறை, இந்திய தூதரகம் மற்றும் பிறமாநில அதிகாரிகளுடன் உதவியுடன் 25 தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அமர்நாத் யாத்திரை சென்ற தமிழர்கள் பனிமலையில் சிக்கி தவிப்பு: உடனடியாக மீட்க கண்ணீர் மல்க கோரிக்கை!