இந்திய குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரின் குடியரசு தின ஒத்திகை இன்று நடந்தது. இதனை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வழக்கமாக குடியரசு மற்றும் சுதந்திர தின ஒத்திகை, ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தொடங்கிவிடும். ஆனால், கடந்த 15ம் தேதி முதல், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்ததால், போலீசாரின் ஒத்திகை தள்ளிப்போட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததையொட்டி, இன்று காலை குடியரசு தின ஒத்திகை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
