Remal Cyclone: வங்கக்கடலில் உருவாகிறது புயல்.. இதற்கு பெயர் என்ன தெரியுமா? தமிழகத்துக்கு பாதிப்பு இருக்கா?
வருகிற 25-ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று நாளை மறுநாள் காலை புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில், கோடை வெப்பம் தணிந்து, தற்போது கோடை மழை தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து குளிர்ச்சியாக சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை எப்போது நீங்கும்? வியாபாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் திட்டவட்டம்
இந்நிலையில், வடதமிழக தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 25-ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி புயலாக உருவாகக்கூடும்.
இதையும் படிங்க: Savukku: என் பையன் அப்படி பண்ணல! குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள்! கோர்ட் படியேறிய சவுக்கு சங்கரின் தாயார்!
வரும் மே 26-ம் தேதி மாலைக்குள் தீவிர புயலாக மாறி மேற்குவங்க பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ஓமன் நாட்டின் பரிந்துரைப்படி ரீமால் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் புயல் ரீமால் என்பது குறிப்பிடத்தக்கது. புயல் வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து மீண்டும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.