Asianet News TamilAsianet News Tamil

பங்காரு அடிகளாருக்கும், எனக்குமானது தந்தை மகன் உறவு போன்றது - சீமான் பேச்சு

பங்காரு அடிகளாருக்கும், எனக்குமான உறவு தந்தை மகன் போன்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

relationship between me and bangaru adigalar looks like father and son says seeman vel
Author
First Published Oct 21, 2023, 10:32 AM IST

தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தேர்தல் மட்டும் தான் வந்து செல்கிறது. ஆனால் வளர்ச்சி இல்லை. தமிழக அரசு மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறீர்கள். இதை எத்தனை மாதம் கொடுப்பீங்க? எங்களது தாய்மார்கள் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ரூ.500 கூலி கொடுக்கிறாங்க. நீங்க கொடுக்கிற 1000, சராசரியாக ஒரு நாளைக்கு 30 ரூபாதான் வரும். பழங்காலத்தில் அரசியில் கோலம் போட்டு, எறும்புகளுக்கு உணவை வைத்தோம். ஆனால் தங்களை இலவச அரசிக்கு இன்று கையேந்த வைத்துவிட்டார்கள். அரசியல் என்பது சாதி, மதம், சாராயம், பணம், இலவசம், மானியம் தான். நாங்கள்; இலவசமாக எதையும் வேண்டாம் என்கிறோம். இலவச கல்வியை கொடுங்க.

மதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சாதி, மதம் எதுவும் அண்ட முடியாத பெருநெருப்பாக இன்றைய தலைமுறை உருவாகி வரவேண்டும். சாதி, மத போதை ஏறிட்டவனுக்கு, அவன் இறந்தாலும் அது போகாது. அற்ப உணர்ச்சிக்கு மனிதன், கடவுள் என்பதை வணங்குவதோடு இருக்க வேண்டும். வீதியில் இழுத்துவிடக் கூடாது. ஆனால் இதை பிரதமரே செய்கிறார். அரசு விற்றால் நல்ல சாராயம், நாம் விற்றால் கள்ளச்சாராயம். சாராயம் குடித்து இறந்தால்; 10 இலட்சம், நாட்டை காப்பாற்றும் வீரன் இறந்தால் கொடுக்கமாட்டார்கள்.

இப்ப நாச்சி புரியுதா.. இன்னமும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு இதுதான் காரணம்.. பிரேமலதா விஜயகாந்த்.!

காவிரி விவகாரத்தில் திரைப்படம் தடை செய்யபடும் என வாட்டல் நாகராஜ் சொல்கிறார். ஆனால் நாங்கள் நினைத்தால், எங்களாலும் தடை செய்ய முடியும். காவிரி பிரச்சினை வந்தால், மட்டும் விட்டால் நாகராஜ் வெளியே வருவார். ஆளுநர் பதவியே தேவை இல்லை. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத, உரிமை, நியமனம் செய்யப்பட்டவருக்கு என்ன உரிமை இருக்க முடியும்? பங்காரு அடிகளார் இறப்பை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பேரிழப்பு தான். பங்காரு அடிகளாரும் நானும் தந்தை மகனுக்கான உறவு போன்றது. பங்காரு அடிகளாருடன் நான் நெருக்கமாக இருந்தேன். எல்லோரும் கருவறைக்குள் வரலாம் என்ற புரட்சியை உருவாக்கியவர். நானே உள்ளே சென்று பூஜை செய்துள்ளேன். கட்சி சுற்று பயணம் முடிந்து நேரில் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட  தலைவர்களுக்கு வரலாற்று அடையாளங்கள் இல்லை. சுதந்திர போராட்டத்தில் பாடுப்பட்ட தலைவர்களுக்கு தெரு பெயர், அரசியல் தலைவர்களுக்கு நகர் பெயர். வ.உ.சி வரலாறு இல்லை. ஆனால் வல்லபாய் படேலின் வரலாற்றை படிக்கச் சொல்கிறீர்கள். நீட், ஜிஎஸ்டி கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ், அவர்களை ஆதரித்தவர்கள் திமுக. அதை ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பவர்கள் தான் பாஜக. சிஏஜி அறிக்கையின் மீது மோடி பதில் பேசமாட்டார். ஆனால் மான்கீபாத் பெட்டிக்குள் அவர் மட்டும் பேசுவார். நாடாளுமன்றத்தில் யார் பேசினாலும் திரும்பி கூட பார்க்கமாட்டார். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளை, தோடு கழற்ற சொல்கிறார். காதில் உள்ள தோடில், பிட்டு இருக்கும் என்றால், வாக்கு இயந்திரத்தில், ஏன் தவறு நடக்காது? என சீமான் கேள்வி எழுப்பினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios