கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக 316 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில், வாக்குமூலத்தில் நகலை கேட்டு வாளையார் மனோஜ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

கொடநாடு கொலை வழக்கு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான 950 எக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் பங்களா கோடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. அத்துடன் பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய், ஜெம்சீர் அலி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைதும் செய்யப்பட்டனர். 

திறமையற்ற முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின்..! அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை - இபிஎஸ்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தனிபடை போலீசார் இது வரை 316 பேரிடம் தனிபடை போலிசார் நடத்திய வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றபட்ட ஆவணங்களை தனிப்படை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி உதகை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைத்தார். இதில் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன், எடப்பாடி பழனிசாமி நெருங்கிய நண்பரும் கூட்டுறவு சங்க மாநில தலைவருமான இளங்கோவன், தற்கொலை செய்துகொண்ட தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை வாக்குமூலம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் 316 சாட்சிகளின் வாக்குமூலம் நகல் வேண்டி இன்று இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார். 

இதையும் படியுங்கள்

கேரளாவில் 2 பெண்கள் நரபலி!துண்டு துண்டாக வெட்டிய உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம்-குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்