சூடு பிடிக்கும் கொடநாடு கொலை வழக்கு..! 326 பேரின் வாக்குமூலம் அறிக்கை..! உதகை நீதிமன்றத்தில் தாக்கல்
கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை நடத்திய மறுப்புலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 326 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தனிப்படை விசாரணை அதிகாரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.
கொடநாடு கொலை வழக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான 950 எக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் பங்களா கோடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்து. அவ்வாறு இந்த தேயிலை எஸ்டேட்க்குள் நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. அத்துடன் பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
இதுதொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய், ஜெம்சீர் அலி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்று ஒரே மாதங்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
தனிப்படை போலீசார் விசாரணை
அதேபோல் இரண்டாவது குற்றவாளியாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த சாயன் குடும்பத்துடன் கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் போது மர்ம வாகனம் மோதியதில் சாயன் மனைவி மற்றும் அவரது குழந்தை துடிதுடித்து உயிரிழந்தனர். அதே மாதத்தில் கோடநாடு கணினி பொறியாளர் தினேஷ்குமார் தற்கொலை என இவ்வழக்கில் கொலை கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது.கோடநாடு பொறியாளர் தினேஷ்குமார், காவலாளி ஓம் பகதூர், சயான் மனைவி வினு பிரியா ,அவரது 6 வயது குழந்தை நீது ,முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் என மர்ம மரணங்கள், கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தவில்லை என இரண்டாவது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான் கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அப்போதைய மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா இவ்வழக்கை மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்ள தமிழக காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவுத் உத்தரவின்பேரில் நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 8 மாதத்திற்கு மேலாக சேலம், ஈரோடு, கோவை உட்பட கேரளா ,கர்நாடகா போன்ற பகுதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் சாட்சிகளை களைத்ததாக கைது செய்யப்படும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் எலக்ட்ரானிக்ஸ் சாட்சிகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கிடைத்த ஆவணங்கள், 60க்கும் மேற்பட்ட செல்போன் ஆவணங்களைக் கொண்டு இதுவரை இவ்வழக்கு விசாரணை குறித்து 326 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில் கடந்தவாரம் இவ்வழக்கை தமிழ்நாடு காவல்துறை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம்
இதனைத் தொடர்ந்து வழக்கு குறித்த விசாரணை செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகள் குறித்த தகவல்கள், அனைத்தையும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனிப்படை போலீசார் சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கோடநாடு எஸ்டேட் தற்கொலை செய்து கொண்ட கணினி பொறியாளர் உட்பட 326 சாட்சங்களிடம் மேற்கொண்ட விசாரணையை உதகை மாவட்டம் நீதிமன்றத்தில் நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தனர்.இதைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை அதிகாரிகள் யார் என்பதை அறிவித்து, சிபிசிஐடி தனி அதிகாரி கோடநாடு கொலை கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதனுடைய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தனிப்படை விசாரணை அதிகாரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய அறிக்கையை நீதிபதியிடம் தாக்கல் செய்தனர்.
உதகை நீதிமன்றத்தில் அறிக்கை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தனிபடை போலிசார் இது வரை 316 பேரிடம் தனிபடை போலிசார் நடத்திய வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றபட்ட ஆவணங்களை தனிபடை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைத்தார். இதில் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன், எடப்பாடி பழனிசாமி நெருங்கிய நண்பரும் கூட்டுறவு சங்க மாநில தலைவருமான இளங்கோவன், தற்கொலை செய்துகொண்ட தினேஷின் தந்தை போஜன், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜனின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் உட்பட 326 நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படியுங்கள்