Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் மட்டும் அல்ல..? பல மாநிலங்களை உள்ளடக்கியது தான் திராவிடம்! தேசிய கீதத்தை சுட்டிகாட்டிய ஆர்.என்.ரவி

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான் ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 

Governor Ravi said that Dravidian includes many states like Tamil Telugu Kerala
Author
First Published Oct 10, 2022, 12:47 PM IST

ஒரே பாரதம் உன்னத பாரதம்

ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர் ஆனால் அது உண்மை இல்லை,இந்தியா என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது இல்லை, ஆங்கிலேயர்கள் 1905ஆம் ஆண்டு வங்கத்தை மேற்கு வங்கம் ,கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரிக்கப்பட நேரத்தில் தமிழகத்தில் வா.ஊ.சிதம்பரம், பாரதியார் போராடினார்கள், பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலபத் சம்பவத்தை எதிர்த்து காமராஜர் போராடினார். எங்கோ நடக்கிறது என அவர்கள் அமைதியாக இருக்கவில்லை.

நாக்கு வெட்டப்படும்..! எச்சரிக்கை விடுத்த மதுரை மாவட்ட பாஜக தலைவர்..! கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்

பாரத் புரிந்து கொள்ள வேண்டும்

இந்தியாவை தெரிந்துகொள்ள புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரத் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரத் என்பது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையில் கொண்டது ஆனால் பாரத் என்பது யாரோ ஒருவரின் கீழ் இருப்பதில்லை பாரத் எப்போதும் தர்மத்தை கடை பிடிப்பதாக இருந்தது அரசர்கள் தர்மத்தை மீரினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இமாலய முதல் கடைசி கடற்பகுதி வரை பாரதம் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது என தெரிவித்தார். 1956ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகணமாக இருந்தது அதன் பின் மொழி அடிப்படையில் கேரளா,கர்நாடக,ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலுங்கானா என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது என கூறினார்.  பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான் நீ என தற்போது பேசி வருகின்றனர்,

இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! பங்கேற்பார்களா தென் மாவட்ட நிர்வாகிகள்..?

தமிழ் மட்டும் திராவிடம் இல்லை

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான் ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை சுறுக்கி உள்ளன. அரசியல் கட்சிகள் அதிகாரத்கிற்காக மொழி அடிப்படையிலும்,சாதி அடிப்படையிலும், சாதியின் உள்ள உட்கட்டமைப்புகளை எல்லாம் வைத்து அரசியல் செய்வார்கள் இதனைத்தான் நமக்கு கூறி வருகின்றனர். ஆனால் இந்தியா என்பது அடிப்படையில் அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமை தான் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கட்டாயப்படுத்தி இந்தியை திணிக்காதீர்..! நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்.! எச்சரிக்கை விடுக்கும் ஸ்டாலின்

 

Follow Us:
Download App:
  • android
  • ios