Asianet News TamilAsianet News Tamil

கேரளா பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல் போன 12 அரிய வைரங்கள் மீட்பு

regained the diamond in kerala padmanaba swami
regained the diamond in  kerala padmanaba swami
Author
First Published Sep 16, 2017, 5:22 PM IST


கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன் காணமல்போன கோடிக்கணக்கான மதிப்புடைய 12 அரிய வைரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரத்தில் நூற்றாண்டு புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இங்கு உள்ள ரகசிய பாதாள அறைகளில் விலை மதிக்க முடியாத தங்க வைர நகைகள்  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, இதுவரை 4 அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் பெரியதான பி ரகசிய அறை மட்டும் இதுவரை திறக்கப்படவில்லை. இதைத் திறந்தால்  ஆபத்து ஏற்படும் என்றதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மூலவர்  பத்மநாபசுவாமிக்கு நகைகள் அணிவிக்கும் போது, அதில் இருந்த சில விலை உயர்ந்த, கோடிக்கணக்காண மதிப்புள்ள வைரங்கள் எங்கோ தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காணமல் போன விலை உயர்ந்த வைரக் கற்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மூலவர்  பத்மநாபசுவாமிக்கு அணிவிக்கப்பட்ட நகைகளில் இருந்த கற்கள் திடீரென காணமல்போகின.

ஆனால், விசாரணையில்அது திருபடப்படவில்லை, நகைகளை தலைமை தந்திரிகள் கையாளும் போது, எங்கோ தவறி விழுந்திருக்கிறது தெரியவந்தது. ஒட்டுமொத்தமாக அந்த நகையில் 26 வைரக்கற்கள் இருந்த நிலையில், அதில் 12 வைரங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவற்றை தேடும் பணிகள் நடக்கின்றன.

இந்த வைரங்களைத் தவிர்த்து, மற்ற விலை உயர்ந்த நகைகளும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மீட்கப்பட்ட வைரங்கள் அனைத்தும் கோடிக்கணக்காண மதிப்பு உடையவை. அதன் மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios