போடி,
லீவு எடுத்துக் கொண்டு போராட்டம் நடத்திய ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினரின் எடுத்த விடுப்பை இரத்து செய்ததால் மீண்டும் போராட்டம் நடத்தினர் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர்.
போடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, “அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பழுதடைந்த நிலையில் உள்ள பஸ்களை மாற்ற வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை முறையாக வழங்க வேண்டும்” என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இதுகுறித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அவர்களுக்கான விடுப்பை போக்குவரத்து கழக நிர்வாகிகள் இரத்து செய்து அந்த மாதிரி போராட்டமே நடக்கவில்லை என்று பதிவு செய்கின்றனர்.
இந்த செயலைக் கண்டித்தும், போராட்டம் நடந்த தினத்தில் அவர்கள் விடுமுறையில் இருந்ததாக பதிவு செய்ய வலியுறுத்தியும் போக்குவரத்து கழக பணிமனை அலுவலகத்திற்குள் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரவிமுருகன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
