Asianet News TamilAsianet News Tamil

முல்லை பெரியாறு அணை உடைந்துவிடும்...? கேரளாவில் வெளியான வீடியோ.. அலறும் ஆர்.பி.உதயகுமார்

முல்லைப் பெரியாறு அணைகுறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

RB Udayakumar request to ban the controversial video related to Mullai Periyar dam
Author
Madurai, First Published Aug 8, 2022, 8:36 AM IST

மக்களை அச்சுறுத்தும் கேரளா

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரளா இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கேரளா முரண்டு பிடித்து வந்தது.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் இரு மாநிலத்திலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தபோது கேரளாவைச் சேர்ந்த சோஹன்ராய் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு ‘டேம் 999’ என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பது போலவும், அணை உடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த படத்திற்கு தமிழகத்தில் வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்தநிலையில் மீண்டும் முல்லைபெரியாறு பகுதியில் உள்ள மக்களை அச்சுறுத்தும் வகையில் கேரளாவை சேர்ந்தவர்களால் அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு தடை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது.

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இப்போ தண்டனையை அனுபவிக்கிறாங்க.. OPSஐ மறைமுகமாக விமர்சித்த? டிடிவி.தினகரன்.!

RB Udayakumar request to ban the controversial video related to Mullai Periyar dam

ரூல்கர்வ் விதியை பயன்படுத்தும் கேரளா

இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முல்லை பெரியார் பிரச்சனையில் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தற்பொழுது ரூட் கர்வ் என்பதை சுட்டிக்காட்டி, அணை நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்தாமல், தற்போது முல்லை பெரியாரில் பத்து மதகுகளில்  மூலம் 3000 கன அடிக்கு மேல், கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கப்பட்டது.

மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் உற்சாக வரவேற்பு அளித்தது ஏன்..? செல்லூர் ராஜூ கூறிய புதிய தகவலால் பரபரப்பு

RB Udayakumar request to ban the controversial video related to Mullai Periyar dam

ராஜஸ்தானாக மாறிவிடும்

இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, கர்நாடக அரசு மதிக்காமல் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது நமது உரிமையை பறிக்க வண்ணம் ரூல்கர்வ் விதியை, தமிழக அரசு கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் ராஜஸ்தான்  போல பாலைவனமாக மாறிவிடும் என தெரிவித்தார்.

RB Udayakumar request to ban the controversial video related to Mullai Periyar dam 

அனிமேஷன் வீடியோவால் சர்ச்சை

தற்பொழுது கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து, அனிமேஷன் செய்த வீடியோ நெஞ்சத்தை அச்சம் கொள்ளும் வகையில், இரு மாநில உறவுகளுக்கு குந்தகம் விலைவிக்கும் வகையில், ஒற்றுமைக்கு குந்தகம் விலைவிக்கும் வகையில், வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய தண்டனையை வழங்க கேரளா முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோவில் கற்பனைக்கு  மிஞ்சு வகையில், குழந்தைகளை பாதிக்கும் வகைலும், கட்டிடங்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  ஆகவே சமூக வலைதளங்களில் இந்த திரைப்படம் வெளிவராமல் இருக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இதுபோன்று  கேரளாவில் திரைப்பட நடிகர்கள், சமூக அலுவலர்கள் சில கருத்துக்களை வெளியிட்டார்கள், அப்போது கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தங்களது கருத்துகளையும் பின்வாங்கியதாக தெரிவித்தார்.

கத்திப்பாரா வழிகாட்டி பலகை விழுந்து விபத்து.. படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்றவர் உயிரிழப்பு..!
 

Follow Us:
Download App:
  • android
  • ios