ravindranath pressmeet about neet ban

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு புதிதாக நடத்த தேர்வை வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க நிர்வாகி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளிடம் தேர்வு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் வளையல், தோடு, முழுக்கை சட்டை, பெரிய பட்டன் வைத்த சட்டை, வாரிய தலைமுடி, கிளிப், பூ, பவுச், பாக்ஸ், பேப்பர்ஸ், செயின், என எதுவுமே தேர்வு அறைக்கு எடுத்து செல்லவும் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

பல்வேறு கெடுபிடிகளுக்கு பின்னர், மாணவ மாணவியர் தேர்வு எழுதி முடித்துள்ளனர்.

இந்நிலையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க நிர்வாகி ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு நடத்தப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது.நாடு முழுவதுமாக ஒரே மாதிரியான கேள்வி தாள் என கூறி சிபிஎஸ்சி ஏமாற்றிவிட்டது.

பல கேள்வித்தாள்களை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மட்டும் எளிமையான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடினமான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.பல்வேறு முறைகேடுகளுடன் நடைபெற்ற இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

பத்து மொழிகளில் ஒரே முறையான கேள்வித்தாள்களை தயார் செய்ய வேண்டும். அவற்றையே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்வததற்கான முன் உதாரணம் உள்ளது.நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோயுள்ளது.

இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.