தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநிலத்தில் விரைவில் சாணி பவுடர், எலி மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மனஉளைச்சல் இல்லாதவர்கள் என்று யாரையும் கூற முடியாது. மனஉளைச்சலில் இருந்து விடுபட வேண்டும். வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். தற்கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க மருத்துவ துறை சார்பில் மனம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 36 மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு மனநலம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி நிறைவடைந்த பின்னர் அவர்கள் பிற கல்லூரிகளுக்கு சென்று மனநல பயிற்சி வழங்குவார்கள். ஒருவருக்கு ஒருமுறை தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் அவரது முடிவு தற்கொலையாகத் தான் இருக்கும்.

கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து மதங்களிலும் பல பிரிவுகள் உள்ளன - கிருஷ்ணசாமி

இதனால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் வரக்கூடாது. தமிழகத்தில் சாணி பவுடர், எலி மருந்து உள்ளிட்டவற்றை பயன்படுத்தியே பெரும்பாலான தற்கொலைகள் நிகழ்கின்றன. இதனை தடுக்கும் விதமாக சாணி பவுடர், எலி மருந்து உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தனியாக ஒருவர் வந்து கேட்கும் பட்சத்தில் எலி மருந்தை விற்கக் கூடாது. வாடிக்கையாளர்களின் கண்களில் படும்படி எலிமருந்தை காட்சி பொருளாக வைத்து விற்பனை செய்யக் கூடாது என்றார்.

பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. முகநூல் வீடியோ வெளியிட்ட நபரின் நிலையை பார்த்தீங்களா.!