திருமண நாள் இறந்த நாளான சோகம்! கோவிலுக்கு சென்ற போது பேருந்து மோதியதில் தம்பதி பலி.. உயிர் தப்பிய குழந்தை.!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (34). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள ஒரகடம் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
ஆற்காடு அருகே திருமண நாளன்று கோயிலுக்கு சென்ற கணவன் மனைவி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (34). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள ஒரகடம் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி (29). இந்த தம்பதிக்கு கிஷோர்(3), தஷ்வந்த்(1) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இவர்களுக்கு 5வது ஆண்டு திருமணநாள் என்பதால் குழந்தை கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி, தஷ்வந்துடன் ஆற்காடு புதுப்பாடி அருகே உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது வேலூரில் வந்தவாசி நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த தஷ்வந்த் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை கண்டித்து அரும்பாக்கம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருமண நாளில் கணவன்-மனைவி விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.