ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். திருப்பத்தூரில் மற்றொரு மூதாட்டிக்கு இளைஞர் ஒருவர் உதட்டைக் கடித்தார்.

மூதாட்டிக்க பாலியல் ரீதியான துன்புறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சுசிலா(80). இந்நிலையில் சுசிலாவின் வீட்டின் பின்புறம் உள்ள மாங்காய் தோப்பிற்கு கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் நந்தகுமார்(19) என்பவர் நேற்று மாலை 5 மணியளவில் வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த இளைஞர் நந்தகுமார் 80 வயது மூதாட்டியிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

தரதரவென இழுத்து சென்று கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அலறி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த நந்தகுமார் மூதாட்டியை கீழே தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். அப்போது உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

19 வயது இளைஞர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நந்தகுமார் மூதாட்டியை தரதரவென இழுத்துச்செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனையடுத்து போலீசார் நந்தகுமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன். இவரது மனைவி ஜெயசுந்தரி (64). இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல காலையில் வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு (30) என்ற வாலிபர் திடீரென ஜெயசுந்தரியை ஓடி வந்து மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.