Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.12 அதிகரிக்க வாய்ப்பு! விண்ணை முட்டும் விலையை கட்டுப்படுத்துங்கள்-ராமதாஸ்

நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின்  விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக் கூடும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். 

Ramadoss said that the price of rice is likely to increase by Rs 12 per kg KAK
Author
First Published Feb 2, 2024, 12:38 PM IST

தமிழகத்தில் அரிசி விலை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். சம்பா/தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். 

Ramadoss said that the price of rice is likely to increase by Rs 12 per kg KAK

அரிசி விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன.?

ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450&லிருந்து ரூ1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்தபட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய்  வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது.

மிக்ஜம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால்  2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும்  கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவை தான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன.

அடிக்கு மேல் அடி..! பேடிஎம் பங்குகள் 20% சரிவு.. 2 நாட்களில் மளமளவென 40% சரிந்து பின்னடைவு..

Ramadoss said that the price of rice is likely to increase by Rs 12 per kg KAK

ஒரு கிலோவுக்கு 12 வரை அதிகரிக்க வாய்ப்பு

தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவைதவிர  அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது. நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின்  விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக் கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Ramadoss said that the price of rice is likely to increase by Rs 12 per kg KAK

விலையை குறைக்க நடவடிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும். அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் விற்க  அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. கன்ஃபார்ம் டிக்கெட் எப்போது கிடைக்கும்? ரயில்வே அமைச்சர் சொன்ன அப்டேட்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios