Asianet News TamilAsianet News Tamil

விளையாட்டுகள், சர்வதேச நிகழ்வுகளில் மது அருந்த அனுமதியா.? தமிழக அரசின் முடிவிற்கு எதிராக சீறும் ராமதாஸ்

விளையாட்டுப் போட்டிகளிலும்,  பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை மட்டும் அவசரம், அவசரமாக  கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Ramadoss opposes decision to allow alcohol consumption at sports and international events in Tamil Nadu KAK
Author
First Published Oct 10, 2023, 11:00 AM IST

சர்வதேச நிகழ்வுகளில் மது விநியோகம்

தமிழ்நாட்டில் நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டிகளின் போதும் பார்வையாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் மது வினியோகம் செய்வதற்கு வசதியாக 1937-ஆம் ஆண்டின் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற இடங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கடந்த மார்ச் 18-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்ட போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதைத் தொடர்ந்து திருமண அரங்குகளில் மது அருந்த அனுமதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. 

Ramadoss opposes decision to allow alcohol consumption at sports and international events in Tamil Nadu KAK

நிகழ்விடத்திலேயே கடை விரிக்கத் தேவையில்லை

ஆனாலும், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகளிலும்  மது வினியோகம் செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டியது மது வணிகம் செய்வதில் கவனம் செலுத்துவதை ஏற்க முடியாது.  பன்னாட்டு/தேசிய மாநாடுகளிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வெளிநாட்டவர்கள் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் என்பதற்காக நிகழ்விடத்திலேயே நாம் கடை விரிக்கத் தேவையில்லை;

அது நமது பண்பாடும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.  சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான பன்னாட்டு/தேசிய விளையாட்டுப் போட்டிகளும்,  உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட  பன்னாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. 

Ramadoss opposes decision to allow alcohol consumption at sports and international events in Tamil Nadu KAK

உலக தமிழ் மாநாட்டில் மது விநியோகிக்கப்படுமா.?

அவை எதிலும் மது இருப்பு வைக்கவோ, பரிமாறவோ அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனிவரும் காலங்களில் மது வகைகளை பரிமாறுவதற்கு தமிழக அரசு துடிப்பதன் காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை அடுத்த சில ஆண்டுகளில் உலகத்தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டால் அதிலும் மது வினியோகிக்கப்படுமா?  அதைத் தான் தமிழர் பண்பாடு  வலியுறுத்துகிறதா? சேவை பெறும் உரிமைச் சட்டம்,  லோக் அயுக்தா அமைப்பை வலுப்படுத்துவதற்கான சட்டம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் என உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய  சட்டங்கள் ஏராளமாக உள்ளன. 

Ramadoss opposes decision to allow alcohol consumption at sports and international events in Tamil Nadu KAK

மது விநியோகம்- கை விட வேண்டும்

அவற்றை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டாத  தமிழக அரசு,  விளையாட்டுப் போட்டிகளிலும்,  பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை மட்டும் அவசரம், அவசரமாக  கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. இந்த சட்டத் திருத்தத்தை  அறிமுக நிலையில் தொடங்கி அனைத்து நிலைகளிலும் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். மக்களின் உணர்வுகளை மதித்து இந்த சட்டத் திருத்தத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு...? தமிழக சட்ட சபையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios