Asianet News TamilAsianet News Tamil

சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்டிடுக..! ராமதாஸ் திடீர் கோரிக்கை

சென்னை விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின்  பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 

Ramadoss insisted that the Chennai airport should be named after the Pallava king Mamallan
Author
First Published Apr 13, 2023, 12:17 PM IST | Last Updated Apr 13, 2023, 12:17 PM IST

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்  இந்தியாவின் மிகப்பெரிய வர்தகத்தை கொண்ட விமானநிலையம் ஆகும். இந்த விமானநிலையத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்தும் சென்றும் கொண்டிருக்கிறது. இந்த விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், சர்வதேச விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரும் வைக்கப்பட்டது. பாஜக ஆட்சி அமைந்ததும் சென்னை விமான நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனையடுத்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா மற்றும் காமராசர் பெயர் மறைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அண்ணா மற்றும் காமராஜர் பெயர் சூட்டவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மீண்டும் அண்ணா மற்றும் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மு.க. ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியல்..! வெளியிட நேரம் குறித்த அண்ணாமலை

Ramadoss insisted that the Chennai airport should be named after the Pallava king Mamallan

மீண்டும் அண்ணா, காமராஜர் பெயர்

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும்,  பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப்பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை  வரவேற்கத்தக்கது! விமான நிலையங்களின் முனையங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள்  பத்தாண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பெயர்களை சூட்ட வேண்டும்; அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து  வலியுறுத்தி வந்தது. பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி! 

Ramadoss insisted that the Chennai airport should be named after the Pallava king Mamallan

பல்லவ மன்னன் மாமல்லன்

விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல  ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு  தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின்  பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு  நடவடிக்கை  எடுக்க வேண்டும்; இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

கருப்பு மாஸ்க் அணிந்து இபிஎஸ்யோடு சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்..! என்ன காரணம் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios