Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்ற ராமதாஸ்...! இதை மட்டும் செய்திடுங்கள் என கோரிக்கை விடுத்த பாமக

பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்டது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,   ஊதிய நிலுவை, பேராசிரியர் நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss has insisted on filling up the vacant posts in government colleges
Author
First Published Sep 23, 2022, 12:10 PM IST

கல்லூரிகளின்  ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கும்

பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்டது வரவேற்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஊதிய நிலுவை, பேராசிரியர்கள் நியமனத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து  அரசின்  கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை - அறிவியல் கல்லூரிகளின்  ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும்; அவற்றுக்கு 2248 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது! அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும் அவற்றின் ஊழியர்களுக்கு பல்கலை.களே ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தேன். அந்த குறை சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!

சுவாசிக்கும் காற்றை நிறுத்திவிட்டு மிச்சபடுத்தி விட்டேன் என கூறுவதா.? பிடிஆரை வெளுத்து வாங்கும் RB உதயகுமார்

Ramadoss has insisted on filling up the vacant posts in government colleges

பணியிடங்களை நிரப்ப வேண்டும்

அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதற்காக பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு சுமார் ரூ.300 கோடி வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அவற்றுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்! 41 அரசு கல்லூரிகளுக்கும் 2248 உதவிப் பேராசிரியர், 745 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றையும், ஏற்கனவே உள்ள 7000 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

முதல்வர் தொடங்கி வைத்த சூப்பர் திட்டம்.! 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வசதி


 

Follow Us:
Download App:
  • android
  • ios