Asianet News TamilAsianet News Tamil

ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ளனும் -சீறும் ராமதாஸ்

உத்தரப்பிரதேசத்தில் கரும்பு கொள்முதல் விலை ரூ.3,750 ஆக உயர்த்தப்படவுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகக்குறைவாக உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

Ramadoss demands to raise the procurement price of sugarcane in Tamil Nadu KAK
Author
First Published Nov 7, 2023, 1:35 PM IST | Last Updated Nov 7, 2023, 1:35 PM IST

கரும்பு கொள்முதல் விலை

ஹரியானா மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,860 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கரும்புக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலை இதுவாகும். ஹரியானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில்  தமிழகத்தில்  நடப்புப் பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை கூட இன்னும் அறிவிக்கப்படாதது  ஏமாற்றம் அளிக்கிறது என பாமக நிறுனவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் அக்டோபர் மாதத்தில் அரவைப் பருவம் தொடங்கியுள்ளது. நடப்பு அரவைப் பருவத்தில் 9.50% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.2919.75, 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,150 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

Ramadoss demands to raise the procurement price of sugarcane in Tamil Nadu KAK

கொள்முதல் விலை நிலவரம்

மாநில அரசுகள் விரும்பினால், கூடுதலாக ஊக்கத்தொகை அறிவித்து கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடியும். அந்த முறையில் தான் ஹரியானாவில் கரும்பு கொள்முதல் விலை ரூ.3,860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த அரவைப் பருவத்தில் கொள்முதல்  விலை ரூ.4,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலை உயர்வு இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது அம்மாநில உழவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஹரியானா மாநிலத்திற்கு அடுத்தபடியாக, பஞ்சாப் மாநிலத்தில் கரும்பு கொள்முதல் விலை ரூ.3,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கரும்பு கொள்முதல் விலை ரூ.3,750 ஆக உயர்த்தப்படவுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகக்குறைவாக உள்ளது. 

Ramadoss demands to raise the procurement price of sugarcane in Tamil Nadu KAK

கொள்முதல் விலையை உயர்த்தாத தமிழகம்

இன்றைய நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள டன்னுக்கு ரூ.2919 என்பது தான்  தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலை ஆகும். நடப்பு அரவைப் பருவத்திற்கான கொள்முதல் விலை மீது தமிழ்நாடு அரசு இதுவரை எந்த ஊக்கத்தொகையையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கடந்த அரவைப் பருவத்தில் கொள்முதல் விலையாக கரும்புக்கு மத்திய அரசால் அறிவிக்கப் பட்ட ரூ.2821 மட்டும் தான் வழங்கப்பட்டது.  கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு சராசரியாக ரூ.3450 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% லாபமாக, ரூ.1725 சேர்த்து கொள்முதல் விலையாக  ரூ.5175 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். 

Ramadoss demands to raise the procurement price of sugarcane in Tamil Nadu KAK

மற்ற மாநிலங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்

ஆனால், மத்திய அரசு அதைவிட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு தான் அதன் பங்கிற்கு ஊக்கத்தொகை வழங்கி, அநீதியை போக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு நடப்பு  அரவை பருவத்திற்கு ஒரு ரூபாயைக் கூட ஊக்கத்தொகையாக இன்று வரை அறிவிக்கவில்லை. கரும்பு விவசாயிகளின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம்  போன்ற மாநிலங்களைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக  ரூ.5000 வழங்கப்பட வேண்டும். குறைந்தது ஹரியானா மாநிலத்தில்  வழங்கப்படும் ரூ.3,860&ஐ விட சற்று அதிகமாக ரூ. 4 ஆயிரமாவது கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு ரூ.2919 கொள்முதல் விலையாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அதன்  பங்கிற்கு டன்னுக்கு ரூ.1,081 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். அதன் மூலம் தமிழக உழவர்களுக்கு   கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 கொள்முதல் விலையாக கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக கட்சி பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios