Ramadoss allegation Kaala ticket higher than usual
வழக்கமான டிக்கெட் விலையைவிட ‘காலா’ டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமாக விமர்சித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 7-ம் தேதி உலகம் முழுக்க இந்தப் படம் ரிலீசாகும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது, லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக வெளியிடுகிறது..
படம் வெளியாக இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், கூடுதல் விலைக்கு ‘காலா’ டிக்கெட் விற்கப்படுவதாக பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். “ஜோரா கைதட்டுங்க... ‘காலா’ திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. 
வழக்கமான அதிகபட்சக் கட்டணம் 165.78 ரூபாய்க்குப் பதிலாக, 207.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால், ‘காலா’ திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்... ஏழைப் பங்காளன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
