Asianet News TamilAsianet News Tamil

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தும் தமிழக அரசு...! ராமதாஸ் அதிர்ச்சி

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

Ramadas accused the Tamil Nadu government of delaying the KIlambakkam metro rail project by not approving it
Author
Tamilnadu, First Published Jul 3, 2022, 11:16 AM IST

கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில்

நவீன காலத்திற்கு ஏற்ப அதற்கு ஈடு கொடுத்து ஓடும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. எனவே அதனை சரி செய்யும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் இரண்டு வழித்தடங்கள் இயங்கி வருகிறது. விரைவாக செல்வதற்கு இந்த மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு பெரிதும் கை கொடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்க கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில்  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு டுவிட்டர் பதிவில்,சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம்  மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது! 

அமெரிக்காவிற்கு பறக்க திட்டமிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..! மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு.?

Ramadas accused the Tamil Nadu government of delaying the KIlambakkam metro rail project by not approving it

காலம் தாழ்த்தும் தமிழக அரசு

விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஒப்புக்கொண்டார். அதன்பின் 6 மாதங்களாகும் நிலையில், இன்னும்  மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கைக்கு  அரசு ஒப்புதல் அளிக்காததை நியாயப்படுத்த முடியாது! கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. சென்னையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்க இப்போதுள்ள புறநகர் ரயில், நகரப் பேருந்து சேவைகள்  போதுமானவையல்ல. அதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள, தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தான் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று நிதியை பெற முடியும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; நடப்பாண்டிற்குள் பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
மேம்பால பணியில் புதையல்.! பழங்காலத்து நகைகளை காட்டி ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில கும்பல்

Follow Us:
Download App:
  • android
  • ios