ram nath kovind wishes vijay

பெண்களின் மனம் கவர்ந்த கள்வனாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கி வைத்து கொண்டாடுபவராகவும் தென் இந்திய திரைப்பட உலகில் மெர்சலாய் வலம் வருபவர் இளைய தளபதியாய் இருந்து தளபதியாக மாறிய நடிகர் விஜய்.

இவர் தற்போது நடித்து வரும் படத்தின் கெட்டப்போடு தமிழகத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து வந்தார். ஆனால் படத்தின் பெயரை நேற்றுவரை வெளிவிடமால் பாதுகாத்து வைத்திருந்தனர்.

சிறு வயதிலேயே அவரது சகோதரி இறந்துவிட்டார் என்ற நெகிழ்ந்த விஜய்யை அண்ணா, அண்ணா என்று உறவுமுறையுடன் அழைக்கத் தொடங்கிய பெண்கள் உயிரை கொடுக்கும் அளவுக்கு தீவிர ரசிகையாக மாறினார்.

இந்நிலையில், இன்று நடிகர் விஜய் தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனிடையே தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பேசாமல் சமுதாயம் சார்ந்து பேசத்தொடங்கியுள்ளார் விஜய்.

இதைதொடர்ந்து தற்போது பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு ஜனாதிபதி தேர்தல் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.