எனது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்தேபோது, அவர்களிடம் இருந்த வாரன்ட்டில் எனது, மகன் பெயர் மட்டும் இருந்தது. எனது பெயர் இல்லை.

தலைமை செயலாளர் வீட்டில் சோதனை நடத்த மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. என் மீது நடவடிக்கை எடுப்பது அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம். என்னிடம் இருந்த்து ரூ.1,12320 மட்டும். ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை.
ஆனால், வீட்டின் பூஜை அறையில் இருந்த வெங்கடேசஸ்வரா, லட்சுமி உள்ளிட்ட வெள்ளி சிலைகளை கைப்பற்றி கொண்டு சென்றுள்ளனர். நான் துணை ராணுவத்தினரால், வீட்டு காவலில் வைக்கப்பட்டேன். என்னை துப்பாக்கி முனையில் மிரட்டியவாறு, வீட்டில் சோதனை நடத்தினர்.

எனது வீட்டில் சோதனை நடந்தபோது, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தயங்கி கொண்டு இருந்தது. தலைமை செயலாளருக்கே இந்த நிலை என்றால், தமிழக மக்களின் கதி என்னவென்று கேட்க முடியவில்லை. கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. தமிழகம் பாதுகாப்பாற்ற நிலையில் இருக்கிறது.
