32 ஆண்டுகள் சிறை..இன்னும் திருப்தி இல்லையா.? நான் கணவருடன் செல்வேன் - உருக்கமாக பேசிய நளினி !
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி பேட்டி அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்தது போல் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினி மற்றும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க..காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சிகள் மாறும் ! திமுகவை சீண்டிய பாஜக தலைவர் அண்ணாமலை
பரோலில் இருந்து நளினியை காவல் துறையினர் தகுந்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடிந்த பிறகு, அவரை விடுதலை செய்தனர். இதேபோல் முருகன், சாந்தன் ஆகியோரும் நடைமுறைகள் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நளினி, 32 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்ட நிலையில் என்ன சந்தோஷம் உள்ளது என்று வேதனை தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் கொடுமைகளை அனுபவித்தேன் என்றும் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம். இன்னும் திருப்தி இல்லையா என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், எனக்காக வாதாடிய எந்த வழக்கறிஞருக்கும் நான் காசு கொடுத்ததில்லை. நான் நானாகவே இருக்கிறேன் என்றும் தமிழக மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றும் கூறினார்.
மேலும் நான் சிறையில் இருந்து வெளியே வர இன்று வரை உடனிருந்து அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார். மற்றொரு பேட்டியில் பேசிய நளினி, ‘என் கணவர் எங்கு சென்றாலும் நான் செல்வேன். நாங்கள் பிரிந்து 32 வருடங்கள் ஆகிறது. எங்கள் குடும்பம் எங்களுக்காக காத்திருந்தது. நான் ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் சந்திக்கத் திட்டமிடவில்லை’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !