rajinikanth pay homage to writer njani
திங்கள்கிழமை இன்று அதிகாலை காலமான எழுத்தாளர் ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞானி சங்கரன் இன்று அதிகாலை மூச்சுத் திணறலால் உயிரிழந்தார். அண்மைக் காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள ஞானியின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப் பட்டிருக்கிறது. அமரர் ஞானியின் உடலுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்தும் ஞானியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “எழுத்தாளர் ஞாநியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனது நண்பர். நான் அவரது ரசிகன். தனக்கு சரியென தோன்றுவதை பயமின்றி பேசவும் எழுதவும் கூடியவர்” என்று கூறினார்.
