தலைவரின் வெற லெவல் லவ் ஸ்டோரி! பார்த்த முதல் நாளே காதலில் விழுந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அற்புதமான நடிப்பு மற்றும் ஸ்டைலால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவரது இதயத்தை வென்ற மனைவி லதா ரங்காசாரியை 1981 இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
1980 களில் லதா ரங்காச்சாரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேர்காணல் செய்யச் சென்றபோதுதான் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. முதல் முறை பார்த்தவுடனேயே ரஜினி லதா மீது காதலில் விழுந்துவிட்டார்.
முதல் சந்திப்பைப் பற்றி நினைவுகூரும் லதா, "அவர் என்னிடம் பிரபோஸ் செய்யவில்லை. அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்துவிட்டு வெளியேறிவிட்டார்" என்று கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அவரது மனைவி லதா ரங்காச்சாரிக்கும் இடையிலான 40 ஆண்டுகால உறவு இப்படித்தான் தொடங்கியது.
அற்புதமான நடிப்பு மற்றும் ஸ்டைலால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவரது இதயத்தை வென்ற மனைவி லதா ரங்காசாரியை 1981 இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
முதல் இதை செய்யுங்க... ஆக்டிவ் அரசியலில் இறங்கிய விஜய்! ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விமர்சனம்!!
லதா - ரஜினிகாந்த் முதல் சந்திப்பு:
20 வயதான லதா ரஜினிகாந்த் சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தார். அப்போது கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினிகாந்தை நேர்காணல் செய்யவேண்டி இருந்தது. அதற்காக ஒரு படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டாரை முதல் முதலில் சந்தித்தார்.
நேர்காணலின் போது, இருவரும் தங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்துள்ளனர். இவரும் முதலில் பெங்களூரு பற்றிதான் பேசினர். லதாவின் குடும்பத்திற்கு பெங்களூருவில் ஒரு வீடு இருந்தது. ஒரு காலத்தில் ரஜினி பெங்களூருவில் பஸ் டிரைவராக பணிபுரிந்தார்.
ரஜினி முதல் சந்திப்பிலேயே தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதும், லதா தனது பெற்றோரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டு பதில் சொல்வதாகக் கூறினார். ரஜினி லதாவின் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்று பிப்ரவரி 26, 1981 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் ரஜினியின் திருமணம் நடைபெற்றது.
லதா ரஜினிகாந்த்:
லதா சென்னையில் ஒரு தமிழ் பிராமண ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
1980களில் லதா தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக இருந்தார். டிக் டிக் டிக், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களில் பாடியிருக்கிறார். ரஜினிகாந்த் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் வெளியான இசை ஆல்பத்திலும் லதா பங்களித்து இருக்கிறார். 1991 இல் சென்னை வேளச்சேரியில் லதா ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அந்த ஆசிரமத்தின் முதல்வராகவும் லதா பணியாற்றுகிறார்.
கமல் வாங்கிய காஸ்ட்லி சொத்துகள்! மேன்ஷன் முதல் கார் வரை... எல்லாமே உலகத்தரம்!