rajinikanth demands TN govt on GST

லட்சக்கணக்கான தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து ஜிஎஸ்டி பிரச்சனையில் தமிழக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒரே நாடு, ஒரே வரி என்பதை வலியுறுத்தி கடந்த 1 ஆம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது.

அதில் திரையரங்குகளுக்கு 18 % ஜிஎஸ்டி வரி போக தமிழக அரசு 30 % கேளிக்கை வரியும் விதிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையங்கு உரிமையாளர்கள் இன்று 3 ஆவது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

Scroll to load tweet…

ஜிஎஸ்டி யை எதிர்த்து அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என நடிகர் கமலஹாசன் தெரிவித்திருந்தார். பெரும்பாலான திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸிடி க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 

ஆனால் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் இப்பிரச்சனையில் ரஜினிகாந்த்தின் நிலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சகணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்'' என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.