Asianet News TamilAsianet News Tamil

ரசிகர்களுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினி..! லால் சலாமில் பொங்கலில் சந்திக்கிறேன்- ரஜினி அதிரடி

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி, லால் சலாமில் பொங்கலில் சந்திப்பதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

Rajini wished Diwali to the fans and said that Lal Salaam will be released for Pongal KAK
Author
First Published Nov 12, 2023, 11:22 AM IST

ரஜினியின் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசு வெடித்தும், நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்  மகிழ்ச்சியோடு தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் நடிகர் ரஜினி ரசிகர்களை சந்திப்பார். அந்த வகையில் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன் குவிந்த தொண்டர்களை பார்த்த ரஜினி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். 

 

பொங்கலுக்கு லால் சலாம்

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் வருகின்ற பெங்கல் பண்டிகையன்று லால் சலாம் படத்தோடு உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.மொய்தீன் பாய் குதாபீஸ் என்று கூறி தனது ஸ்டைலில் வணக்கம் தெரிவித்தது ரசிகர்களை உற்சாகமடையவைத்துள்ளது. ரஜினியின் இந்த வீடியோ பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளியை கொடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios