rajini fans arrested in chennai

போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற ரஜினியின் ஒன்லைன் பொலிடிக்கல் டாக், ஒட்டுமொத்த தமிழிகத்தையும் தகிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

போர்...சிஸ்டம் சரியில்லை உள்ளிட்ட ரஜினி பேசிய அரசியல் வார்த்தைகளை வைத்து இணையத்தில் பல வகையான மீம்ஸுகள் உலாவருகின்றன. இது குறித்து ரஜியின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை எளிதாக கடந்து சென்றிருக்க வேண்டிய ரஜினியோ, தன்னை விமர்சித்தவர்கள் தரம் தாழ்ந்து போய்விட்டனர் என்ற கூற மேற்கு மண்டலத்தில் வெடித்த போராட்டம் சென்னையில் தற்போது கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, சென்னையில் தமிழர் முன்னேற்றப்பேரவை போராட்டம் நடத்தி பரபரப்புக்கு தீ மூட்டியுள்ளது. 

இந்தச் சூழலில், ரஜினிக்கு ஆதரவும், சீமான், தமிழர் முன்னேற்றப்பேரவைத் தலைவர் வீரலட்சுமி ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வண்ணாரப் பேட்டையில் ரஜினி ரசிகர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமை கை மீறிச் செல்வதை உணர்ந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ரசிகர்கள் அனைவரையும் கைது செய்தனர். 

ரஜினி சொன்ன அந்த போர் ஆரம்பித்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது என்று வலைதளங்களில் வளைத்து வளைத்து கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்...