சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மீது தேசிய கொடியை போர்த்தி வைதது மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.