raja twitted that there is no way when the protest coverts violence
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்துக்கு பல்வேரு தரப்பினரும் அசிங்க அசிங்கமாக திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான நிலையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதிலும் ஒரு பெண் பலியான கொடுமை அரங்கேறியுள்ளது. இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதுவரை இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் சரிதான் என்கிற ரீதியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை என எச் ராஜாவின் இந்த டிவிட்டர் பதிவுக்கு அசிங்க அசிங்கமாக திட்டி பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
